சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பதவி விலக தயார்..? – நேற்றைய கூட்டத்தில் நடந்தது என்ன..!

Published by
murugan

உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும், குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாக ரீதியிலான உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்:

காங்கிரஸின் இந்த  கூட்டம் சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் கட்சிக்காக பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் நாங்கள் அனைவரும் அதை நிராகரித்தோம். என தெரிவித்தார்.

இடைக்கால தலைவராக சோனியா காந்தி:

கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படும்வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு முன் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உள்பட 5 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago