மே 17ஆம் தேதிக்கு பிறகு என்ன நடக்கப்போகிறது? – சோனியா காந்தி கேள்வி.!
மே 17 க்கு பிறகு என்ன நடக்கும்? மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு என்ன நடக்கபோகிறது என மத்திய அரசிற்கு சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் முதன் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 19 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.
3ஆம் கட்டமாக மே 4ஆம் முதல் மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சில தளர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஊரடங்கு குறித்து, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிபுரியும் மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கையில் மே 17 க்கு பிறகு என்ன நடக்கும்? மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசிற்கு அந்த ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.