காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி!
குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காங்கிரஸ் எம்பிக்களை சந்திக்கிறார் சோனியா காந்தி.
காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி எடுக்க வேண்டிய நிலைபாடுகள் குறித்து எம்பிக்களுடன் சோனியா காந்தி ஆலோசிக்க உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், பண வீக்கம், விலைவாசி உயர்வு, ஆளுநர் & துணை நிலை ஆளுநர் தலையிடு குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் குழு முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் சில முக்கிய பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்ப குறைந்தபட்ச நேரம் வழங்கப்படுவதாகவும், மசோதாக்களை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுவதாகவும் மத்திய அரசு மீது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி.