ராமர் கோயில் திறப்பு விழா – சோனியா காந்தி, கார்கே நிராகரிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். பிரதமர் மோடி ஜனவ.22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். ராமர் கோயில் திறப்பு விழாவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 2.O.! அனுமதி மறுத்த மாநில அரசு.?

இந்த நிலையில், ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனால், விழாவில் பங்கேற்பது தொடர்பாக அறிவிக்கப்படாமல் இருந்தனர்.

தற்போது, ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜக திறக்கிறது. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதனை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்யும் அரசியல் ஆக்கியுள்ளார்கள் என்றுள்ளனர்.

Recent Posts

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

13 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

25 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

57 mins ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

2 hours ago