டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு
டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் படு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.எனவே தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.அதில் வரும் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.