சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (73)கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இரவு 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்தி டெல்லியில் இருக்கும் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,மேலும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரும் மருத்துவமனையில் உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.