BREAKING :சிவசேனாவுடனான கூட்டணி ஆட்சிக்கு சோனியா காந்தி ஒப்புதல்..?!
கடந்த மாதம் மஹாராஷ்டிராவில் 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் , காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜக அழைத்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். போதிய ஆதரவு கிடைக்காததால் அதை நிராகரித்தது.பின்னர் சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதை தொடர்ந்து சிவசேனா , தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறியது.பின்னர் தேசியவாத காங்கிரஸ் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.யாரும் ஆட்சியமைக்க பெருபான்மை இல்லாததால் ஆளுநர் குடியரசு தலைவர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
தற்போது மஹாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி நிலவி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல் வெளியாகி உள்ளது.