வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பலமான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்தியா எனும் எதிர்கட்சிகள் கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்ததாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 2 நாட்கள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலையிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றார். அதனை தொடர்ந்து மற்ற அரசியல் தலைவர்களும் மும்பை வந்தடைந்தனர்.
தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் மும்பை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு மேள தாளங்கள் முழங்க பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…