BIG Breaking :காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா காந்தி

Default Image

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக  முடிவு செய்தார்.ராஜினாமா தொடர்பாக கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்தார் ராகுல்.மேலும்  நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும்  தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று  ராகுல் காந்தி தெரிவித்தார்.

இன்று  டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் .கூட்டத்தில் சோனியா காந்தி,ராகுல் காந்தி ,வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.இந்த காரிய கமிட்டி கூட்டமானதாக  இரு  முறை நடைபெற்றது .

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வாகியுள்ளார் .1998 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவாராக சோனியா காந்தி பதவி வகித்தார் .அதன் பின்பு 2017 ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றார் மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து விலகுவதாக அறிவித்தார் .புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருப்பார் என காரியக்கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்