காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா விலக முடிவு ?

காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த கூட்டத்தில் ,காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.