வேளாண் அதிகாரி தவறாக பேசியதால் தான் அடித்தேன் என வீடியோ மூலம் பேசி இணையத்தில் பதிவிட்டுள்ளார் சண்டிகர் பாஜக பிரமுகர் சோனாலி போகட்.
கடந்த ஆண்டு அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சோனாலி போகட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாய சந்தைக்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் செயலாளர் சுல்தான் சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சோனாலி, தனது செருப்பால் வேளாண் அதிகாரியை அடித்துவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அப்போது போலீஸ் விசாரணை முடிந்தபின்பு தனது, இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்றை சோனாலி பதிவிட்டார். அதில், தன்னை அந்த அதிகாரி தவறாக பேசியதாகவும், அந்த இடத்தில் ஒரு பெண் என்ன செய்திருப்பாளோ அதனை தான் நான் செய்தேன். அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறன். தூக்குத்தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.’ என அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…