ஆந்திர மாநிலத்தில் விஜவாடா பகுதியை சேர்ந்தவர் நாராயண ரெட்டி.இவரது தாயார் ஆதியம்மாள் ,தந்தை வெங்கட் ரெட்டி ஆவார்.இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் வீட்டில் மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.இதன் காரணமாக இவரது மனைவி இவரிடம் சண்டை போட்டுவிட்டு அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன் சூழ்நிலையில் அவர் வேலைபார்த்து வந்த தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 300000 ருபாயை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளார்.பின்னர் இவர் 300000 லட்சம் தம் சொந்த தேவைக்கு பயன்படுத்தியது நிறுவனத்திற்கு தேவைவந்தது.
இதன் காரணமாக அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டு பணத்தை திரும்பி தருமாறு தெரிவித்துள்ளனர்.இந்த சமயத்தில் தனது தாயார் மீது 1500000 இன்சூரன்ஸ் கட்டிய இவர் சில மாதங்கள் கழித்து தாயை கொன்று விட்டு இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 21-ம் தேதி தந்து தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய தூக்கமாத்திரையை மோரில் கலந்து கொடுத்துள்ளார்.ஆனால் அவர்கள் உயிரிழக்காததால் அவரின் கைமணிக்கட்டிலும் கழுத்திலும் கத்தியை வைத்து அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து உறங்குவது போல் நடித்த இவர் மறுநாள் காலை யாரோ வந்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நான்காயிரம் பணத்தை திருடி சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு நாராயணரெட்டி மீது சந்தேகம் எழுந்துள்ளது.இதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோரை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து நாராயண ரெட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…