கொரோனா சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்ததால் பெண் மருத்துவரை ஓங்கி அறைந்த மகன் – வைரல் வீடியோ உள்ளே!
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது மகன் அந்த மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் தான் காணப்படுகின்றனர். இருப்பினும் தங்களால் முடிந்த அளவு வரக்கூடிய நோயாளிகளை காப்பாற்றிவிட வேண்டும் என்று பல மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், சிலர் தங்கள் உறவினர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் பட்சத்தில் பலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுகின்றனர்.
இதேபோல கர்நாடகா மாநிலம் பெல்லாரி டவுனை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இவரது உடலை சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் டாக்டர் பிரியதர்ஷினி என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, உயிரிழந்த முதியவரின் மகன் திப்பேசாமி என்பவர் மருத்துவர் பிரியதர்ஷனிடம் தனது தந்தைக்கு நீங்கள் உரிய சிகிச்சை அளித்து இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என வாக்குவாதம் செய்துள்ளார்.
இருப்பினும் முதியவரின் மகனை மருத்துவர் பிரியதர்ஷினி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த திப்பேசாமி பெண் மருத்துவரான பிரியதர்ஷினியை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அந்த நபர் மருத்துவரை தாக்கும் காட்சிகள் அந்த கொரோனா வார்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பெண் மருத்துவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் மருத்துவர் பிரியதர்ஷினியும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகாரின் பேரில் திப்பேசாமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜனார்த்தன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உறவினர்கள் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப்பணியாளர்களாக மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பிரியதர்ஷினி மீது நடந்த தாக்குதல் மிக கண்டிக்கத்தக்கது எனவும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,
Another day another doctor getting beaten up!
“M. Gowda was undergoing treatment in VIMS, died due to heart attack. Holding doctor responsible for his father’s death Thippeswami attacked a lady doctor on duty. Case registered”
Source : Times Of Bellary@drharshvardhan @PMOIndia pic.twitter.com/pVU1VzDn2R
— Dr Abbas Ali | Ortho Surgeon (@boneteacher) May 23, 2021