கொரோனாவால் உயிரிழந்த சீதாராம் யெச்சூரியின் மகன் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
34 வயதான ஆஷிஷ், மூத்த நகல் ஆசிரியர், புதுதில்லியில் ஒரு முன்னணி செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆஷிஷ் யெச்சூரி. ஆரம்பத்தில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், பின்னர் குர்கானுக்கு மாற்றப்பட்டார்.
இரண்டு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆஷிஷ் யெச்சூரியன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு தான் மிகுந்த வலியும் வேதனை அடைந்ததாகவும், மகனை இழந்து வாடக்கூடிய சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Deeply saddened and pained to hear about the loss of Ashish Yechury.
I offer my heartfelt condolences to Comrade @SitaramYechury, his family and friends at this difficult time.
— M.K.Stalin (@mkstalin) April 22, 2021