உத்தரப்பிரதேசத்தின் நகட்டியா பகுதியை சார்ந்த கந்த ரஹ்மான் என்பவரின் மகள் சாந்திபி. இவர் முகமது அஷ்பாக் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.அப்போது ரகுமான் தன் மகளின் திருமணத்திற்கு 10 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
இதையடுத்து திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் மீண்டும் 5 லட்சம் தனது அப்பாவிடம் இருந்து வாங்கி வருமாறு முகமது அஷ்பாக் தன் மனைவியை கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு ரகுமான் மறுக்க ஆத்திரமடைந்த முகமது அஷ்பாக் தன் மனைவியை துன்புறுத்தியுள்ளார்.
தகவல் அறிந்து அங்கு ரகுமான் அவரது மனைவி குல்ஷானுடன் வந்தனர். இரு வீட்டினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற கோபமடைந்த முகமது அஷ்பாக் தன் மாமியார் குல்ஷானின் மூக்கை கடித்து உள்ளார்.
அதே நேரத்தில் முகமது அஷ்பாக் தந்தை குல்ஷானின் காதை கத்தியால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் குல்ஷான் மயங்கி விழுந்து உள்ளார்.பின்னர் முகமது அஷ்பாக் அவரது தந்தை இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.புகார் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.காயம் அடைந்த குல்ஷான் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…