ஒரே மேடையில் தந்தைக்கும்-மகனுக்கும் திருமணம் நடந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மகனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.குழ்ந்தையோடு வந்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் ஆனது ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் நடந்துள்ளது.இங்கு பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலான மக்கள் திருமணம் ஆகமாலே ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அதே கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் செய்யாமலே டும்பம் நடத்தி வருந்துள்ளனர்.இந்த தம்பதிகளுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார்.
இவர்களுடைய மகன் ஜித்தீசும் தன் தாய்-தந்தை போல் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்து உள்ளார். இதனிடையே இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இவ்வாறு இக்கிராமத்தில் பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் தங்களது இல்லற வாழ்வை நடத்தி வருவதை கண்ட ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறது.அதன்படி தந்தை மற்றும் மகன் இருவருக்குமே ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.இதில் தம்பதிகள் 4 வரும் திருமண ஆடையில் அழகுற காட்சி அளித்தவாறு தங்கள் வீட்டு செல்லத்தை கொஞ்சியவாறு நிற்கின்றனர்.பழங்குடியின மக்கள் மத்தியில் இத்திருமணம் ஆனது வரவேற்ப்பை பெற்றுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…