கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் அருகே பாலா பகுதியை சேர்ந்தவர் அம்முகுட்டி(76). கணவனை இழந்த இவருக்கு அலெக்ஸ் பேபி (46) உட்பட இரண்டு மகன்கள் உள்ளன. ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாக வில்லை .
தந்தை பெயரில் மாவேலிகரையில் இருந்த 10 சென்ட் நிலத்தை அலெக்ஸ் பேபி 60 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் தாய் அம்மு குட்டியுடன் பாலாவில் உள்ள ஒரு லாட்ஜில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 04-ம் தேதி அம்முகுட்டி லாட்ஜில் இறந்துள்ளார்.
இதையடுத்து அவரின் உடலை அலெக்ஸ் பேபி காரில் ஏற்றிக் கொண்டு பல இடங்களில் சுற்றியுள்ளார். பின்னர் பலாவில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே உள்ள ஒரு ஓடையில் அம்மு குட்டியின் உடலை வீசியுள்ளார். மறுநாள் காலையில் உடலை பார்த்ததும் பாலா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் இப்பகுதியில் இருந்த கேமராவை ஆய்வு செய்தபோது அதில் ஒருவர் காரில் வந்து சடலத்தை வீசியது தெரியவந்தது. கார் பதிவு எண் தெளிவாக தெரிந்தது இதையடுத்து அலெக்ஸ் பேபியை போலீசார் கைது செய்தனர்.
அலெக்ஸ் பேபியிடம் விசாரித்தபோது அடக்கம் செய்ய பணம் இல்லாததால் உடலை ஓடையில் வீசியதாக கூறினார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…