கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? சுகாதாரத்துறை விளக்கம்

Default Image

ட்விட்டரில் கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது வீழ்ச்சியை அடைந்து வருகிறது, பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது.

மேலும் கொரோனா 2 வது அலை மனிதர்களை பெரிதும் அச்சுருத்தி வந்த நிலையில் தற்போது விலங்குகளின் உயிர்களையும் பதம் பார்த்து வருகின்றது. இதையடுத்து ட்விட்டரில் அமீஷ் என்ற நபர் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் “கொரோனா வெவ்வேறு பாலின மக்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? நான் வீட்டிற்குள் மட்டுமே இருக்கும் ஒரு பெண், நான் பாதிக்கப்படலாமா?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு கோவிட் – 19 செயற்குழு தலைவர் டாக்டர். என்.கே. அரோரா இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று பதில் ட்விட் செய்துள்ளார். மேலும் NTAGI(National Immunization Technical Advisory Group) கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்துகிறது என்றும், உங்கள் முறை வரும்போது கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ளுமாறும் மத்திய சுகாதாரத்தறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்