மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இதனிடையே புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக இன்று உரையாற்றினார்.அவரது உரையில், புதிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது.கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி. மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை.பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…