கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசிக்கு ஒரு சில வாரங்களில் உரிமம் பெற்று விடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அதனைப்போல இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுசுகையில், கொரோனா தடுப்பூசிக்கு ஒரு சில வாரங்களில் உரிமம் பெற்று விடலாம். இந்தியாவை பொருத்தவரை 6 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்தியாவை சேர்ந்த சீரம்,பாரத் உள்ளிட்ட நிறுவனங்கள் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற விண்ணப்பம் செய்துள்ளன .தடுப்பூசி ஒவ்வொருவருக்கும் குறுகிய காலத்தில் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் மருத்துவ , முன்கள மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் ,50 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் மற்றும் 50 வயதிற்கு கீழ் உள்ள மற்ற நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அதிக அளவிலான பாதிப்புகள் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது. இந்த மாநிலங்களில் 56 % பாதிப்புகளை கொண்டுள்ளது . இந்தியாவில் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…