டெல்லி: மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய பகுதிகளில் சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடர், விறுவிறுப்புக்கும் , பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உறுப்பினர்களிடையே விவாதங்கள் அனல் பறந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியது இன்னும் சில நாட்கள் பேசுபொருளாகவே இருக்கும்படி அமைந்தது. அதற்கு பாஜகவினர் தற்போது வரையில் தங்கள் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் இந்து மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தி இந்துமதம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள்குறுக்கிட்டு தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டனர். இந்துக்கள் பற்றி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.
ராகுல் காந்தி தொடர்ந்து, கடவுள் சிவன் உள்ளிட்ட சில புகைப்படங்களையும் காட்டி தனது உரையை தொடர்ந்தார். சிவன் அருகில் இருக்கும் சூலம் வன்முறையின் அடையாளம் அல்ல அது அகிம்சையின் அடையாளம் எனவும் தனது உரையை தொடர்ந்தார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசிய பல்வேறு கருத்துக்களில், பிரதமர் மோடி , இந்துக்கள், ஆர்எஸ்எஸ், கடவுள் பற்றிய சில கருத்துக்கள் என ராகுல்காந்தி குறிப்பிட்ட சில கருத்துக்கள் மக்களவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி நேற்று பேசுகையில் கூட, மக்களவை நேரடி ஒளிபரப்பு செய்யும் SANSAD TVயையும் விமர்சித்தார். அதில் ஆளும் கட்சியினர் பேசுவது மட்டும் முழுதாக ஒளிபரப்பப்படுகிறது. கேமிராமேன் கூட உங்களை (பாஜக) தான் அதிகம் காண்பிக்கிறார் என அவையிலேயே நேரடி ஒளிபரப்பு பற்றியும் தனது விமர்சனத்தை முன்வைத்து இருந்தார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…