பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்.!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள மக்கள் காட்டுவது வழக்கம். இதை தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட்தான் அதை 1947 நவம்பர் 26-ம் தேதி முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி ஆவார்.
அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்றால் அது மொரார்ஜி தேசாய்.இவர்10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். அதைத் தொடர்ந்து 9 முறை ப.சிதம்பரமும் , முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 8 முறை பட்ஜெட்டை தாக்கல் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளனர்.
வழக்கமாக பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தான் பட்ஜெட்டை அறிவிப்பு நடைபெறும்.இந்த நடைமுறையை நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 1999-ம் ஆண்டு மாற்றினார். 1999-ம் ஆண்டு முதல் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2016-ம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் இணைத்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.பட்ஜெட்தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அச்சியிடுதல் பணி துவங்குவதற்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நிதியமைச்ச அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கப்படும்.