நேற்று நடைபெற்று முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் நடந்த சில களோபர , சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து சிறு சிறு நிகழ்வுகளை பார்க்கலாம்….
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நேற்று அங்குள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு மாலை 4 மணி (இறுதி) நிலவரப்படி 81.1% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கூட்டணி : ஆளும் பாஜக பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் இடதுசாரி கட்சி (CPM) காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. திரிபுரா -ஐபிஎஃப்டி மற்றும் திப்ரா மோதா ஆகிய கட்சிகளும் மாநில கட்சி அளவில் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன.
2018 தேர்தல் முடிவுகள் : கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 56 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) கட்சி 16 இடங்களை கைபற்றயது. திரிபுரா -ஐபிஎஃப்டி கட்சியானது 8 இடங்களை கைப்பெற்றியது. காங்கிரஸ் கட்சியானது எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை. இம்முறை கடந்த முறையை (36 இடங்கள்) அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் வாக்குப்பதிவு செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
பறிமுதல் : கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலை விட இந்த ஆண்டு 2023 சட்டமன்ற தேர்தலின் போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், போதைப்பொருள், இலவசப் பொருட்கள் ஆகியவை 20 மடங்கு அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
படகு பயணம் : திரிபுரா மாநிலம், தலாய் மாவட்டத்தில் உள்ள ரைமா பள்ளத்தாக்கு பகுதி சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க தும்பூர் எனும் ஏரியில் படகுகளில் பயணம் செய்து வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
வன்முறைகள் : செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள போக்ஸாநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சிபிஐ(எம்) உள்ளூர் குழு செயலாளர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். அவர் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
அதே போல, கோமதி மாவட்டத்தில் உள்ள கக்ராபன் சட்டமன்றத் தொகுதியிலும் இரண்டு சிபிஐ(எம்) வாக்குச் சாவடி முகவர்கள் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மேலும், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கயேர்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பபித்ரா காரின் வாக்குச்சாவடி முகவருடைய வாகனமும் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக பிரமுகருக்கு நோட்டீஸ் : பாஜக பொதுச் செயலாளர் திலிப் சைகியா நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ட்விட்டரில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…