பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இன்று டெல்லியில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

PM Modi

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF) எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த TRF அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஆதரவு பெற்ற இயக்கம் என கூறப்படுகிறது.  இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படியான சூழலில் நேற்றே உள்துறை அமைச்சர் அமித்ஷா அனந்த்நாக் புறப்பட்டார். அங்கு சம்பவம் குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி சவூதி அரேபியா அரசு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி திரும்பினார். சவுதியில் இருந்து டெல்லி வந்த பிரதமர் மோடி பாகிஸ்தான் வழியாக உள்ள வான்வழியை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்புத்துறை சார்பில் தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்ஷங்கர், தேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது என சில தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது, பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய  தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF) பயங்கரவாத அமைப்பானது, பாகிஸ்தானை தலைமையாக கொண்டு அந்நாட்டில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற இயக்கம். இந்த லஷ்கர் பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு அளிக்கிறது என்ற குற்றசாட்டு எழுந்தாலும், அதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.

லஷ்கர் இ தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF) ஆகிய பயங்கரவாத அமைப்புக்கு காஷ்மீர் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இந்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது, தீவிரவாத அமைப்பை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்ற குற்றசாட்டை முன்வைத்து பாகிஸ்தான் நாட்டுடனான தொடர்பை துண்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை மூடவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை அங்கிருக்கு காலக்கெடு கொடுத்து அதிகாரிகளை வெளியேற்றவும் முடிவு செய்யலாம் என்றும், இந்தியா – பாகிஸ்தான் வர்த்தக உறவை முழுதாக துண்டிக்கவும் மத்திய அரசு முடிவு செய்யலாம் என தனியார் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. உறுதியான முடிவுகள் மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் வெளிப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்