வலியால் துடித்த பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்.!
- காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.
- கடும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் கர்ப்பிணி பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று 2 உயிர்களை இராணுவ வீரர்கள் காப்பாற்றினார்.
காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடும் பனி காரணமாக வாகன போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டதால் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ வீரர்கள் 100 பேர் சேர்ந்து அந்த கர்ப்பிணி கடும் பனி பொழிவில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து தாயும் ,சேயும் நலமாக உள்ளனர்.கடும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் கர்ப்பிணி பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று 2 உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இராணுவ வீரர்களின் செயலுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.