லடாக்கில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்.!
லடாக்கின் லே மாவட்டத்தில் கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 9 வீர்ரகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர். அதன்படி, மறைந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் “லடாக்கில் துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது வீரம் மிக்க வீரர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். துக்கமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.