இன்று சூரிய கிரகணம்..! மக்களே..! இதை மட்டும் செய்யாதீங்க..!
நாடு முழுவதும் இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையி, இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
நாடு முழுவதும் இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதவாது, சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு தொடங்கி, சுமார் 45 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் தெரியும். சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கிரகணத்தை வெறுங்கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிரகணத்தை காண பிர்லா கோலரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான கடைசி சூரிய கிரகண்ம் இன்று தோன்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.