சமூக சேவகர் பத்மஸ்ரீ பிரபாபென் ஷா காலமானார்..!
சமுக சேவகரான பத்மஸ்ரீ பிரபாபென் ஷா தனது 92 வயதில் காலமானார்.
குஜராத் : 1930 இல் பர்தோலியில் பிறந்த சமுக சேவகி ஸ்ரீமதி பிரபாபென் ஷா நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் நேற்று மாலை காலமானார். பிரபாபென் ஷாவின் சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பர்தோலியில் 2 ஆண்டுகள் ஆசிரியையாகப் பணிபுரிந்த அவர் டாமனில் குடும்பத்துடன் குடியேறி தனது சேவைப் பணிகளை அங்கு தொடங்கினார். பத்மஸ்ரீ பிரபாபென் ஷா நீண்ட நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைக்காக அரசு மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 92வது வயதிலும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து சமூக சேவையாற்றிய பிரபாபென் ஷா மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம் டாமனில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாபென் ஷாவின் இறுதிச் சடங்குகள் இன்று டாமனில் நடைபெறுகிறது