வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், நேற்று குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இதற்கு போலீசார் முதலில் அனுமதி மறுக்க, பின்னர் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இந்நிலையில், போலீசாரின் அனுமதியை விவசாயிகளில் ஒரு தரப்பினர் ஏற்று கொள்ள, மற்றொரு தரப்பினர் காலை 9 மணிஅளவில் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால் பதற்றம் நிலவியது. இதனைத்தொடர்ந்து, போலீசாரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் டிராக்டர்களுடன் செங்கோட்டைக்குள் நுழைந்தனர். இந்த சம்பவத்தின் போது ஒரு விவசாயி உயிரிழந்தார். ஆனால் போலீசார் சுட்டதால் தான் விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டினார். இதற்கு டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். தடுப்புகளை மீறி சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளன என விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் கூறுகையில் பேரணியில் ஏற்று கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து கொள்கிறோம். இந்த செயல்களில் விவசாயிகள் ஈடுபடவில்லை. சில சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…