கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி நேற்று கொரோனா வைரஸை சமூகம் பரவல் குறித்து அச்சம் தெரிவித்ததோடு நிலைமை கைகூடவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,317 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 401 அதிகரித்துள்ளது. மேலும் 680 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 10,527 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று துமகுரு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மதுசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுகிறது என்று நாங்கள் கவலைப்படுவதாக கூறினார். அதை கட்டுப்படுத்துவது மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளோம். நோய்த்தொற்று காரணமாக துமகுரு மாவட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கொரோனா வைரஸை சமூக பரவலை குறித்து மறுத்துள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…