சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி…!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்து வரும் நிலையில் சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவது உண்டு.
இந்நிலையில் 84 வயதாகும் அன்னா ஹசாரேவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025