கேரளாவில் இதுவரை 836 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.!
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு 2,29,886 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,851பேர் குணமடைந்தனர். இதுவரை 1,44,471 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும், இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 836 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 84,497 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.