நாடாளுமன்ற அத்துமீறல்.! 8 பேர் சஸ்பெண்ட்.. முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சமயத்தில் மைசூர் பாஜக எம்பியின் அனுமதி பெற்று பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்த ர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் திடீரென மக்களவை எம்பிக்கள் இருக்கும் பகுதியில் குதித்து விட்டனர். மேலும், மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளியே பரப்ப விட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்.! மத்திய அமைச்சர் விளக்கம்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி..! 

அதே சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளியிட்டு கோஷமிட்டனர். அதனை லலித் என்பவர் படம்பிடித்தார். இவர்களுக்கு விஷால் சர்மா என்பவர் உதவி செய்துள்ளார். இதில் லலித்தை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர். லலித்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறி பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய 8 பேர் அதிரடியாய் சஸ்பெண்ட் செய்தும் மக்களவை செயலர் உத்தரவிட்டார் .

இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி எழுந்தது. அதனால் பிற்பகல் 2 மணி வரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி , அனுராக் தாகூர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . இதில், நாடளுமன்ற பாதுகாப்பு குறித்து முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படும் என கூறபடுகிறது.

Recent Posts

“ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் மரியாதை.!

சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…

40 minutes ago

இபிஎஸ் தலைமையில் ஜெ. பிறந்தநாள் விழா! மீண்டும் செங்கோட்டையன் ‘ஆப்சென்ட்’!

சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…

48 minutes ago

தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில்,  டோமலபெண்டா…

2 hours ago

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

3 hours ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

3 hours ago

இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…

3 hours ago