நாடாளுமன்ற அத்துமீறல்.! 8 பேர் சஸ்பெண்ட்.. முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சமயத்தில் மைசூர் பாஜக எம்பியின் அனுமதி பெற்று பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்த ர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் திடீரென மக்களவை எம்பிக்கள் இருக்கும் பகுதியில் குதித்து விட்டனர். மேலும், மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளியே பரப்ப விட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்.! மத்திய அமைச்சர் விளக்கம்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி..!
அதே சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளியிட்டு கோஷமிட்டனர். அதனை லலித் என்பவர் படம்பிடித்தார். இவர்களுக்கு விஷால் சர்மா என்பவர் உதவி செய்துள்ளார். இதில் லலித்தை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர். லலித்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறி பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய 8 பேர் அதிரடியாய் சஸ்பெண்ட் செய்தும் மக்களவை செயலர் உத்தரவிட்டார் .
இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி எழுந்தது. அதனால் பிற்பகல் 2 மணி வரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி , அனுராக் தாகூர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . இதில், நாடளுமன்ற பாதுகாப்பு குறித்து முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படும் என கூறபடுகிறது.