Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர்.
நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவுகளின்படி, 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 61.06 சதவீதமாக (2.87 லட்சம் மாணவர்கள்) உள்ளது. அடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 9.46 சதவீதமாக (3.22 லட்சம் மாணவர்கள்) உள்ளது.
பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானது முதல் தற்போது வரையில் 7 மாணவ மாணவிகள் உயிரிழந்ததாக சோக செய்திகள் வெளியாகியுள்ளது. முதலில், மஞ்சேரி மாவட்டத்தில் தந்தர் எனும் பகுதியில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மீண்டும் அதே மாவட்டத்தில் மேலும் 2 மாணவிகள் உயிரிழந்த செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் மஹாபூபாபாத் பகுதியில் 2 மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். அடுத்து அதே மாவட்டம் கிழக்கு பகுதியில் 1 மாணவன், நல்லகுண்டா பகுதியில் ஒரு மாணவன் ஜார்செர்லா பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே இறந்து கிடந்துள்ளான்.
இந்த மரணங்கள், தூக்கில் தொங்கியும், கிணற்றில் குதித்தும், குளத்தில் மூழ்கியும் என பல்வேறு முறைகளில் தங்கள் இறுதி முடிவை உயிரிழந்த மாணவ மாணவிகள் தேடிக்கொண்டனர் எனவும் தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…