தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Telangana Students Suicide

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர்.

நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவுகளின்படி, 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 61.06 சதவீதமாக (2.87 லட்சம் மாணவர்கள்) உள்ளது. அடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 9.46 சதவீதமாக (3.22 லட்சம் மாணவர்கள்) உள்ளது.

பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானது முதல் தற்போது வரையில் 7 மாணவ மாணவிகள் உயிரிழந்ததாக சோக செய்திகள் வெளியாகியுள்ளது. முதலில், மஞ்சேரி மாவட்டத்தில் தந்தர் எனும் பகுதியில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மீண்டும் அதே மாவட்டத்தில் மேலும் 2 மாணவிகள் உயிரிழந்த செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் மஹாபூபாபாத் பகுதியில் 2 மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். அடுத்து அதே மாவட்டம் கிழக்கு பகுதியில் 1 மாணவன்,  நல்லகுண்டா  பகுதியில் ஒரு மாணவன் ஜார்செர்லா பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே இறந்து கிடந்துள்ளான்.

இந்த மரணங்கள், தூக்கில் தொங்கியும், கிணற்றில் குதித்தும், குளத்தில் மூழ்கியும் என பல்வேறு முறைகளில் தங்கள் இறுதி முடிவை உயிரிழந்த மாணவ மாணவிகள் தேடிக்கொண்டனர் எனவும் தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்