டயர் வெடித்ததால் நேர்ந்த துயரம்.! பேருந்து மீது டிரக் மோதி கோர விபத்து.! 6 பேர் பலி.!

குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அகமதாபாத் வதோரா தேசிய நெடுஞ்சாலையில், அகமதாபாத் நோக்கி தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலையில் எதிர்ப்பாரா விதமாக டயர் வெடித்த காரணத்தால் பழுதுநீக்கம் செய்வதற்காக சிகோத்ரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது.
அப்போது பேருந்தின் பின்புறம் பயணிகள் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் அதிகாலை 4.30 மணியளவில் அவ்வழியாக வந்த டிராக் (லாரி) பேருந்தின் மோதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். மருத்துவ சிகிச்சையின் போது தற்போது ஒருவர் உயிரிழந்ததாகANI தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் வாகன ஓட்டுனரும் ஒருவர் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025