கர்நாடகாவில் இதுவரை 5,08,495 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கர்நாடகாவில் இன்று 9,886 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,30,516 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 8,989 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5,08,495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, மருத்துவமனையில் 1,12,783 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 100 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 9,219 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.