ஆந்திராவில் ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் நேற்றுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் சிக்னல் இல்லாததன் காரணமாக அலமண்டா மற்றும் கண்டகப்பள்ளி ரயிலானது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியது.
தற்பொழுது, ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, இருப்புப்பாதையை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று மாலைக்குள் இருப்புப்பாதை சீராகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…