டெல்லியில் இதுவரை 1,41,826 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.!

Default Image

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 1,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,57,354  ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,059 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,41,826 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,257ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 11,271 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்