இதுவரை இந்தியாவில் 10.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இதுவரை இந்தியாவில் 10.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 10.45 கோடிக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், ஒரேநாளில் 29.33 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.