கர்நாடகாவில் இதுவரை 1.70 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கர்நாடகாவில் ஓரே நாளில் 7,385 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7,385 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,56,975 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று 6,231 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,70,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இன்று ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,429 ஆக உயர்ந்துள்ளது.