இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பாம்புகளின் விஷம் பெரும் மதிப்பை பெற்றுள்ளன. இந்த பாம்பின் விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துப்பொருள்களை உருவாக்குகின்றனர். அதிலும் குறிப்பாக பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படும் கோப்ராக்சின் எனும் மருந்துப்பொருள் இந்த பாம்பின் விஷத்தின் மூலமே உருவாக்குகின்றனர். இதனால் இதற்க்காக அரசின் சார்பில் பல்வேறு பாம்பு பண்ணைகள் மூலம் இந்த நஞ்சுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷம் விற்கப்பட இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி, இங்கிலீஷ் பஜார் டவுனில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த கலியாசாக் பகுதியை சேர்ந்த ரபீக் அலி, ஆஷிக் மண்டல், மசூத் ஷேக் ஆகியோரிடம் இருந்து பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பாம்பு விஷம் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…