“வானத்தில் கோடு போட முடியாது “என்று யார் சொன்னது..! ட்விட்டரில் ட்ரண்டாகும் ஸ்மிருதி ட்வீட்
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஆனால் சில தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி ஆகி விட்டது.இந்திய அளவில் அக்கட்சி 350 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தி அமோதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.
இதில் அமோதி தொகுதியில் 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார்.ஆனால் இந்த வருடம் அமோதி தொகுதி அவருக்கு கை கொடுக்கவில்லை அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருத்தி ராணி 40000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வானத்தில் கோடு போட முடியாது என்று யார் சொன்னது என்ற கருத்தை ட்விட் செய்துள்ளார். அதனை 21,000 த்திற்கும் அதிகமானோர் ரீ-ட்விட் செய்தும்,85,000 அதிகமான பேர் லைக் செய்தும் உள்ளனர். இதனால் ட்விட்டர் பக்கத்தில் தற்போது இது வைரலாகி வருகிறது.