புகைப்பிடிப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி.! எச்சரிக்கும் சுகாதாரத்துறை.!
புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக சுவாச பிரச்சனை ஏற்படும். ஆதலால் இறப்பு விகிதம் அதிகமாகும் அபாயம் உள்ளது
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால், அது முதலில் தாக்குவது மனிதனின் நுரையீரலை தான். சுவாச பிரச்சனை அதிக அளவில் ஏற்படும். ஆதலால் ஏற்கனவே புகைபழக்கம் இருப்பவர்ளுக்கு கொரோனா ஏற்பட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
புகைபிடிக்கும் போது கை நேரடியாக வாய்க்கு செல்கிறது. அதனால், நோய் தொற்று எளிதில் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக சுவாச பிரச்சனை ஏற்படும். ஆதலால் இறப்பு விகிதம் அதிகமாகும் அபாயம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இருதய நோய், புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பது கடினம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் 63 சதவீதத்தினர் மேற்கண்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.
இதனால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது புகையிலை உபயோகப்படுத்தவர்களை எச்சரிக்கிறது. புகையிலை, குட்கா போன்ற உடலுக்கு கேடு தரும் பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலம், எச்சில் துப்பும் ஆர்வம் அதிகமாகிறது. இதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.