கன்னியாகுமரி விரைவு ரயிலில் புகை…! அலறியடித்து கீழே இறங்கிய பயணிகள்…!
அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ருகர் – கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை எழுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்.
அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ருகர் – கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை எழுந்துள்ளது. ஒடிசாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்த போது புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இதனால் கையிலிருந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் கீழே இறங்கினர். புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.