மாநிலங்களவை மைக்கில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் காலையில் கூடியது. அனைத்து உறுப்பினர்களும் ,முன்னாள் மத்திய மந்திரியும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபால் ரெட்டி மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இந்தோனேஷியாவில் குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர் வரிசையில் இருந்த ஒரு மைக் திடீரென இணைப்பு பகுதியில் இருந்து புகை வந்தது.
புகை வருவதை பார்த்த பாஜக உறுப்பினர் கே.ஜே அல்போன்ஸ் வெங்கையா நாயுடுவிடம் கூறினார். பின்னர் அவை ஊழியர்களை அழைத்து வெங்கையநாயுடு அந்த இணைப்பே சரி செய்தார். பின்னர் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தனர். மின் கசிவு காரணமாக இருந்து மைக்கில் புகை வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025