கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களோடு ஸ்மார்ட் போன் வழங்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பல பேர் உயிரிழந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி ஏற்பட்ட இழப்புகளால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களுடன் ஸ்மார்ட் போன் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து ஹைதராபாத் மாநில நலத்துறை அதிகாரி அக்கேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளதாவது ஸ்மார்ட் போன்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, காவல்துறை உள்ளிட்ட அவசர அழைப்பு எண்கள் இருக்கும் என்றும் இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்மார்ட் போன் குறித்த ஆலோசனைகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 200 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…