செல்போன் என்பது தற்காலத்தில் மனித வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த செல்போன்களில் ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுதான் அதிகம். அப்படி பயன்பாட்டுக்கு வரும் புதிய செல்போன் மாடல் இந்திய மக்களின் எண்ணத்தையும் மனதில் கொண்டே தயாரிக்கப்படுகிறது. காரணம் இங்கு மக்கள் தொகையும் அதிகம். ஸ்மார்ட் போன் மோகமும் அதிகம்.
அப்படி இந்தியர்களின் வாழ்வியலில் ஸ்மார்ட் போன்கள் எந்த அளவு இடம்பெற்றுள்ளன என்பது பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு வெளியாகி இருந்தது. அதன் படி, தகவல்களை இப்போது பார்க்கலாம். ஸ்மார்ட் போன்களை அதிகம் உபயோகப்படுத்துவது 18 முதல் 25 வயது உள்ளவர்கள். அவர்களில் 83 சதவீத பெண்களும், 85 சதவீத ஆண்களும் உள்ளனர்.
அடுத்து இரவு தூங்கும் முன் 80 சதவீதம் பேர் தங்கள் போன்களை உபயோகிக்கின்றனர். அதிகாலை எழுந்ததும் 74 சதவீதம் பேர் தங்களது போன்களை உபயோகப்படுத்துகிறீர்கள். 92 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துவதால் அறிவு தங்கள் அறிவு வளரும் என உபயோகப்படுத்துகிறார்கள். அதே போல 78 சதவீத பெயர் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதை தங்கள் வாழ்வாதாரம் வாழ்வியல் முறை மேம்பட்டதாக நினைக்கின்றனர்.
56 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என உணருகிறார்கள். ஸ்மார்ட் போன்கள் அவர்களை அடிமையாக வைத்துள்ளது.
ஸ்மார்ட் போன் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால் அவர்களுக்கு மன நல பாதிப்பு, கண் குறைபாடு, கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை என பல பிரச்சனைகள் தங்களுக்கு இருக்கிறது என அவர்களே நினைத்து கூறுகிறார்கள். 73 சதவீதம் பேர் செல்போன் உபயோகப்படுத்துவதால் எதிர்மறை எண்ணங்கள் வருவதாக கூறுகின்றனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…