செல்போன் உபயோகிக்காமல் இத்தனை சதவீதம் பேரால் வாழ்வை நகர்த்தவே முடியாதாம்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Default Image
  • தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது பெரும்பாலானோருக்கு அது இன்னொரு கைபோல மாறிவிட்டது.
  • அப்படி செல்போன் உபயோகப்படுத்தும் மனிதர்களின் மனநிலை குறித்து அண்மையில் வெளியான ஆய்வறிக்கை அதிர்ச்சியளித்துள்ளது.

செல்போன் என்பது தற்காலத்தில் மனித வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த செல்போன்களில் ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுதான் அதிகம். அப்படி பயன்பாட்டுக்கு வரும் புதிய செல்போன் மாடல் இந்திய மக்களின் எண்ணத்தையும் மனதில் கொண்டே தயாரிக்கப்படுகிறது. காரணம் இங்கு மக்கள் தொகையும் அதிகம். ஸ்மார்ட் போன் மோகமும் அதிகம்.

அப்படி இந்தியர்களின் வாழ்வியலில் ஸ்மார்ட் போன்கள் எந்த அளவு இடம்பெற்றுள்ளன என்பது பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு வெளியாகி இருந்தது. அதன் படி, தகவல்களை இப்போது பார்க்கலாம். ஸ்மார்ட் போன்களை அதிகம் உபயோகப்படுத்துவது 18 முதல் 25 வயது உள்ளவர்கள். அவர்களில் 83 சதவீத பெண்களும், 85 சதவீத ஆண்களும் உள்ளனர்.

அடுத்து இரவு தூங்கும் முன் 80 சதவீதம் பேர் தங்கள் போன்களை உபயோகிக்கின்றனர். அதிகாலை எழுந்ததும் 74 சதவீதம் பேர் தங்களது போன்களை உபயோகப்படுத்துகிறீர்கள். 92 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துவதால் அறிவு தங்கள் அறிவு வளரும் என உபயோகப்படுத்துகிறார்கள். அதே போல 78 சதவீத பெயர் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதை தங்கள் வாழ்வாதாரம் வாழ்வியல் முறை மேம்பட்டதாக நினைக்கின்றனர்.

56 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என உணருகிறார்கள். ஸ்மார்ட் போன்கள் அவர்களை அடிமையாக  வைத்துள்ளது.

ஸ்மார்ட் போன் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால் அவர்களுக்கு மன நல பாதிப்பு, கண் குறைபாடு, கண் எரிச்சல்,  தலைவலி, தூக்கமின்மை என பல பிரச்சனைகள் தங்களுக்கு இருக்கிறது என அவர்களே நினைத்து கூறுகிறார்கள். 73 சதவீதம் பேர் செல்போன் உபயோகப்படுத்துவதால் எதிர்மறை எண்ணங்கள் வருவதாக கூறுகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்